லிபியா அணை உடைப்பு விவகாரத்தில் 8 அதிகாரிகள் கைது

அணை உடைப்பு விவகாரம் குறித்து லிபியா சட்டத்துறை உயர் அதிகாரி அல்-சித்திக் அல்-சூரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக டெர்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது தொடர்பாக, நீர்வளத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்.
அவர்களில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள் ஆவர். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவற்றால் இந்தப் பேரிடருக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வரை உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 10 times, 1 visits today)