பிரான்ஸில் ரயில் நிலையத்தில் நின்ற பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் மெற்றோ நிலையத்தில் வைத்து பயணி ஒருவரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது.
அதனை திருடி சென்ற திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள La Motte-Picquet-Grenelle மெற்றோ நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இரவு 9 மணி அளவில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவரை திடீரென சுற்றிவளைத்த குழு ஒன்று, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை கொள்ளையிட்டுச் சென்றனர்.
மிக விரைவாக கொள்ளையர்கள் மெற்றோ நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
120,000 யூரோக்கள் மதிப்புள்ள Jaeger-LeCoultre நிறுவனத்தின் கைக்கடிகாரம் ஒன்றே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)