மக்களை அடக்குவதற்கு இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம்!
மக்களை அடக்குவதற்கே இலங்கை அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த போது நிகழ்வு முடிவுற்றதையடுத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஒன்லைன் சேப்டி கொமிஷன் என்பது நாட்டினுடைய ஜனாதிபதி இந்த கொமிஷன் சபைக்கு ஐந்து பேரை நியமிப்பார். அந்த ஐந்து பேருக்கும் மக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பார்கள். அதில் வருகின்ற முறைப்பாட்டை ஆராய்ந்து பார்த்து உரிய இடத்திற்கு தெரியப்படுத்தி அதனை அகற்றாவிட்டால் குறித்த நிறுவனத்தை ரத்து செய்ய முடியும் இல்லாவிட்டால் தண்டப்பணம் அறவிட முடியும்.
இவ்வாறான சட்டம் வருமாக இருந்தால் இந்த ஐந்து பேரும் மாத்திரமே எது உண்மை எது பொய் என அறிவிப்பார்கள் அவ்வாறான நிலை ஏற்படப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களுடைய குறைபாடுகளை ஐந்து பேர் மாத்திரமே சொல்லக்கூடிய நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது சாத்தியப்படுமா என்ற எமக்குத் தெரியாது என்றும் இது ஜனநாயக விரோத செயல் எனவும் இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான எவ்வித கருத்துக்களும் சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்ய முனைகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.