இலங்கையில் இணைய மோசடிகள் அதிகரிப்பு!

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 150 முறைப்பாடுகள் இணைய மோசடிகள் குறித்து கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.
தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மோசடிக்காரர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
(Visited 11 times, 1 visits today)