இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும் : சி.வி.கே. சிவஞானம்
இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கிறது.
நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கான் காரர்களே குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு கொடுப்பவர்களாக அறிந்திருக்கிறோம். ஆனால் இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தை கூடிய வட்டிக்கு கொடுக்கும் நாடாக மாறி வருகிறது.
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.
சர்வதேச நாணய நிதியம் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை.
நாங்கள் ஒன்றை கூறுகிறோம், இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐ எம் எப் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஆகவே சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும் சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காக தனது அடிமடியில் கை வைக்க விடாது” என தெரிவித்துள்ளார்.