பால்மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு கிலோ பால் பவுடருக்கு தற்போது விதிக்கப்படும் 650 ரூபாய் வரியை நீக்கினால், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட்டை 600 ரூபாய்க்கு கொடுக்கலாம்.
கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பால்மாவிற்கான வரி 05 வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் பால்மா விற்பனை 50 சதவீதத்தால் குறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)