பம்பலபிட்டியில் ஏற்பட்ட சூறாவளி : வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கொழும்பில் நேற்று (22.09) பிற்பகல் கடும் மழை மற்றும் காற்றுடன் பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று போன்ற நிலை ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காற்று டயகோபா மேகம் என அழைக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடலில் இருந்து நிலத்தை நோக்கி நகர்ந்த இந்த புயலானது பின்னர் எவ்வாறான ஒரு தோற்றத்தை பெறுகிறது என்பதை திணைக்களம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்த புயல் நிலைமை காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரைத் தகடுகள் உடைந்தன.
(Visited 8 times, 1 visits today)