2500 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் அமெரிக்கா!
அமெரிக்க இராணுவம் கிட்டத்தட்ட 2,500 F-35 போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1.7 டிரில்லியன் டொலர்களை இதற்காக செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவிர பராமரிப்பு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் (GAO) வழங்கிய அறிக்கையின்படி, அமெரிக்க வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுத அமைப்புகளில் ஒன்றான F-35 திட்டம், ஜெட் விமானங்களைச் செயல்பட வைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொன்றும் சுமார் $100 மில்லியன் செலவாகும் எனவும், 10,000 க்கும் அதிகமானவை பழுதுபார்ப்பதற்காக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் F-35 இல் 450 விமானங்கள் மட்டுமே தற்போது சேவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)