ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த உளவுத்துறையினர்
ஜெர்மனியில் இணையத்தள பாவனையாளர்களுக்கு உளவு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலக்கட்டங்கில் உலகளாவிய ரீதியில் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த இணைய தளங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்ளும் குழு ஒன்றை ஜெர்மனிய நாட்டின் உளவு துறையினர் கண்டுப்பிடித்திருக்கின்றார்கள்.
உலகளாவிய ரீதியில் மேற்குலக நாடுகளில் உள்ள இணையத்தளங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றது.
பல நாடுகளில் இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோரை பிடிப்பதற்காக பல உளவு துறைகள் நியமிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட 11 உறுப்பினர்களை ஜெர்மனி உளவு துறை மற்றும் அமெரிக்க உளவு துறை இனம் கண்டிருக்கினடறார்கள்.
இந்த 11 பேரும் கொளைக்கிவ் என்று சொல்லப்படுகின்ற ஒரு அமைப்பின் அங்கத்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.
மேலும் இவர்கள் பல மேற்குலக நாடுகளின் முக்கிய நிறுவனங்களுடைய இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்திருக்கின்றது.
தற்பொழுது இவர்கள் இனங்காணப்பட்டு இவர்களுக்கு பிடியாணை பிரப்பிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்திருக்கின்றது.
குறிப்பாக இந்த இணையத் தாக்குதல் தாரிகள் பல நிறுவனங்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள் என்றும் பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார அலுவலகத்தினுடைய இணையத்தளங்கள் மீதும் இவர்கள் தாக்குதல் நடாத்தினார்கள் என்றும் தெரிய வந்திருக்கின்றது.