ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் பரிதாபமாக உயிரிழப்பு

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர், தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை மத்திய கிழக்கு பகுதியான Saint-Étienne (Loire) நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அதன்போது 51 வயதுடைய போராட்டக்காரர் ஒருவர் அங்குள்ள சிலை ஒன்றின் மீது ஏறி போராடிய போது கை தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

சிலையில் இருந்து விழுந்தபோது சிமெந்து கட்டில் தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக SAMU மருத்துவக்குழுவினர் குறிப்பிட்டனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!