ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளில் மைத்திரியும் ஒருவர் – சரத் பொன்சேக்கா!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். .
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21.09) இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவதளபதியால் தனது இராணுவதலைமையகத்தை கூட பாதுகாக்க முடியவில்லை எனவும், சரத்பொன்சேகா தாக்கப்பட்டவேளை அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன எனவும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சரத்பொன்சேகா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகள் இருவரில் ஒருவர் மைத்திரிபால சிறிசேன என கடுமையாக விமர்சித்துள்ளார்.





