டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டொலர் வருவாய்
டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களிப்பதாக அதன் பொருளாளர் இந்திக டி சொய்சா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “Digicon Sri Lanka 2030” வேலைத்திட்டம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை துரிதப்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதேவேளை, ‘நிலையான டிஜிட்டல் சமூகத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு 41வது தடவையாக கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை இலங்கை கணினி சங்கம் ஏற்பாடு செய்யும் என அறிவிக்கப்பட்டது.