இலங்கை

முன்னறிவிப்பின்றி ஜனாதிபதியுடன் பயணமான MP-க்கள்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், அவர்களில் பலர் ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புகளில் கலந்துள்ளதை புகைப்படங்களின் மூலம் காணமுடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி விக்ரமசிங்க சந்தித்த போது காணப்பட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ருவான் விஜேவர்தன, ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வொன்றின் புகைப்படத்தில் இருப்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் பிரேம்நாத் தொலவத்த மற்றும் தற்போது அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்