சிங்கப்பூரில் இரு விபத்துகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நேர்ந்த
சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரு விபத்துகளில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) வேலையிடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் கடந்த சனிக்கிழமைகளில் நடந்த விபத்துகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.
முதல் சம்பவத்தில், 45 வயதுடைய இந்திய ஊழியர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பயனியர் ரோடு நார்த்தில் இருந்து வெளியேறும் துவாஸ் நோக்கி செல்லும் வழியில் உள்ள பான்-தீவு விரைவுச்சாலையில் நடந்தது.
ஊழியர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருமே சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்றொரு விபத்தில் 41 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி அன்று காலை 10.45 மணியளவில் Cavenagh சாலையில் North-South Corridor வேலைத்தளத்தில் நடந்தது.
கீழே விழுந்த எரிவாயு சிலிண்டர்களின் பலகை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்று MOM கூறியுள்ளது.
விபத்தை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.