ஸ்பெயினில் மனைவிக்கு 1.7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
ஸ்பெயினில் மனைவிக்கு 1.7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
ஸ்பெயின் நாட்டில் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக ரூ.1.7 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
25 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும்போது வீட்டு வேலை செய்ததற்காக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து ரூ.1.7 கோடி ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் இவானா மோரால். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில், இவானாவின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்ற நீதிபதி லவுரா ருயிஸ் அலமினோஸ், 25 ஆண்டுகளாக ஊதியமின்றி இவானா வீட்டு வேலைகளைச் செய்து வந்தததைக் குறிப்பிட்டு அவருக்கு குறைந்தபட்ச ஊதியம் ஒதுக்கி 25 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு ரூ.1.7 கோடி ஊதியமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சுத்தம் செய்வது, கழிவறை கழுவுவது, சமையலறையை பேணுவது என வீட்டை பராமரிக்கும் வேலைகளை ஆணும் பெண்ணும் சரிசமமாக பங்கிட்டு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி, அவ்வாறு சமமாக பிரித்துக்கொள்ளவில்லையெனில், வீட்டில் அதிக வேலை செய்பவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.