குர்திஸ்தான் விமான நிலையத் தாக்குதல் – ஈராக்கிற்கான துருக்கிய தூதருக்கு அழைப்பு
குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிறிய விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈராக் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஈராக் ஜனாதிபதி அப்துல் லத்தீஃப் ரஷீத் ஈராக்கிற்கான துருக்கியின் தூதரை வரவழைக்கவுள்ளார் என்று ஜனாதிபதி அறிக்கை தெரிவித்துள்ளது.
அர்பிட் சிறிய இராணுவ விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு சேவையின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் குர்திஷ் கட்சிகளில் ஒன்றான PUK இன் தலைவரான Bafel Talabani, மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தவர்கள் ஈராக் குர்திஷ் பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
ஆளில்லா விமானம் துருக்கியின் எல்லை வழியாக ஈராக் வான்வெளிக்குள் நுழைந்ததாக ஈராக் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ரசூல் அறிக்கையில் கூறினார்.
வடக்கு ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) போராளிகளை குறிவைப்பதாக துருக்கி தொடர்ந்து விமானத் தாக்குதல்களை நடத்துகிறது, மேலும் ஈராக் பிரதேசத்தில் டஜன் கணக்கான புறக்காவல் நிலையங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.