இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் : கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் அமுல்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செயலாளர், பாராளுமன்ற சிறப்புக் குழு, இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவற்காக சபாநாயகரால் 11 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து ஆர்வமுள்ள தரப்பினரும் நிறுவனங்களும் அக்டோபர் 12, 2023 அன்று அல்லது அதற்கு முன் தொடர்புடைய முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளை சமர்ப்பிக்கலாம் என்று குழு தெரிவித்துள்ளது.