இலங்கை செய்தி

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர்த்தேகத்த்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இன்று (15) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் 27 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழிவதற்கு இன்னும் 15 அடிகள் உள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய 04 நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மின்சார உற்பத்திக்காக தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து பிரதானமாக நீர் விநியோகிக்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை