யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 இன்று ஆரம்பம்!

யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 எனும் தொனிப் பொருளிலான மூன்று நாள் கண்காட்சி யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று காலை ஆரம்பித்து வகைக்கப்பட்ட இக்கண்காட்சியானது நாளையும் நாளை மறுதினமுமாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.
இக் கண்காட்சியை இலங்கை கட்டிட நிர்மாண கழகத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி பொறியியளாளர் நிஷ்ங்க விஜேரத்தன விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மூத்த தலைவர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(Visited 12 times, 1 visits today)