செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இளைஞரின் கொடூரசெயல்…மூவர் பலி: வெளியான புகைப்படம்

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் கூரான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி மூன்று கொலை செய்த இளைஞரை பொலிசார் சம்பவயிடத்திலேயே கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞர் 19 வயதான ஆர்தர் கலர்னேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

கலர்னேவ் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், அதன்பொருட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மூவரும் தொடர்புடைய சந்தேக நபரும் அறிமுகமானவர்கள் என்றே தெரியவந்துள்ளது.சம்பவத்தின்போது பகல் 9.20 மணியளவில் 911 இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதாகவும், பெலங்கர் தெரு பகுதியில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின்

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் தரப்பு, அங்கே மூவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதை உறுதி செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த மூவரும் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் தான், சந்தேக நபரை பொலிஸார் கடும் போராட்டத்திற்கு பின்னர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!