சீனாவில் ராட்சத டவர் கிரேன் சரிந்து விபத்து – அறுவர் பலி!

சீனாவின் ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.
இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
(Visited 13 times, 1 visits today)