பிரித்தானியாவில் 40 விமானங்கள் இரத்து!

பிரித்தானியாவின் கேட்விக் விமான நிலையத்தில் 40 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் பணியாளர்கள் இல்லாததால் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மன்னிப்புகோரியுள்ள கெட்விக் விமான நிறுவனம் ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
6,000க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த இடையூறுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)