டுபாயில் வேகமாக உயரும் மக்கள் தொகை! ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டவர்கள்
டுபாயில் வெளிநாட்டவர்களுக்கு நடப்பு ஆண்டின் முதல் பாதியில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாக்களில் 63 சதவீதம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
அதே முதல் பாதியில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசாக்களின் எண்ணிக்கையில் 52 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முதலாக 2019 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்டன் விசா, ஒரு நீண்ட கால ரெசிடென்சி விசா அனுமதி ஆகும். இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் வசிக்கவும், வேலை செய்யவும் அல்லது படிக்கவும் அனுமதி உண்டு.
இவ்வாறு நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், அறிஞர்கள் மற்றும் தொழில் சார்ந்த நிபுணர்கள், சிறந்த மாணவர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்கள் போன்ற திறமையானவர்களுக்கு மட்டுமே கோல்டன் விசா வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நவம்பர் 2022 நிலவரப்படி, 150,000 க்கும் மேற்பட்ட கோல்டன் விசாக்களை துபாய் அரசு வழங்கியுள்ளது. அதுபோல, இந்தாண்டின் முதல் பாதியில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா விசாக்களின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19 தொற்றுநோய்க்கு பிறகு, உலகின் பல நாடிகளில் இருந்து பலரும் துபாய்க்கு குடிபெயர்ந்து வருவதால், துபாயின் மக்கள்தொகை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்த தரவுகளின் படி, துபாயின் மக்கள்தொகை எண்ணிக்கையானது இந்தாண்டின் தொடக்கத்தில் 3.550 மில்லியனில் இருந்து தற்போது 3.623 மில்லியனை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.