வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான அடையாள அட்டை – சிக்கிய சிங்கப்பூர் நாட்டவர்
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான அடையாள அட்டையை வழங்கியதற்காக 48 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் நர்ராஹி பின் நோமன் என்ற அவரை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் (ICA) அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த ஜனவரி 31 அன்று பூன் லே டிரைவில் அவர் வசிக்கும் இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
28 வயதுமிக்க இந்தோனேசிய ஊழியரை தவறு செய்யத் தூண்டியதற்காக கடந்த 14 அன்று நர்ராஹிக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. போலியான சிங்கப்பூர் ஐசி வைத்திருந்ததற்காக இரண்டு இந்தோனேசியர்களுக்கு தலா இரண்டு மாத சிறைத்தண்டனை கடந்த ஜனவரியில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இருவருக்கும் நர்ராஹி உதவியது விசாரணையில் தெரியவந்தது.