செய்தி தமிழ்நாடு

விரைவில் சிபிசிஎல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன்

மாசுக் கட்டுப்பாட்டு துறை மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து சிபிசியில் நிறுவனத்தில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்

விரைவில் சிபிசிஎல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

ஆங்காங்கே உள்ள சாயப்பட்டறைகள் அங்குள்ள கழிவுகளை முறையாக கையாலாகாத காரணத்தால் கொசஸ் தலை ஆற்றில் நீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது

தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அந்த நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

பரிசோதனை முடிவு வந்த பின்னர் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழக முதல்வர் வருங்காலங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சமாளிப்பதற்கு எப்படி கையாளுவது என்பது குறித்து இந்தியாவிற்கு முன்னோடியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன

குறிப்பாக காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்

எதிர்காலத்தில் தமிழகத்தில் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு இந்த ஆண்டு வெப்ப அலை அதிகமாக வீச உள்ளது என்ற எச்சரிக்கையை தந்துள்ளது அந்த வெப்ப அலை தமிழகத்தில் ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

வருகின்ற ஆண்டில் கொடைக்கானல் ஊட்டி ஏற்காடு பிச்சாவரம் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை அதன் மீள் தன்மையில் இருந்து பாதுகாப்பது என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி சுற்றுச்சூழலை பயன்படுத்துவது என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது இதன் பிறகு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்

இந்தியாவில் கார்பன் சமநிலை என்ற நிலையை அடைவதற்கு 2070 ஆம் ஆண்டு தான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஆனால் தமிழகத்தில் கார்பன் சமநிலையில் உள்ளது என்பதை அதற்கு முன்னதாகவே அடைவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இயற்கை பூமித்தாயை காப்பாற்றுவதற்காக இந்தியாவிற்கே தமிழக முதல்வர் முன்னோடியாக செயல்பட்டு வருகிறார் முதன்மை மாநிலமாக ஆக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்

அரசாங்கம் என்பது மனிதர்களுக்கான ஆட்சி அவர்களுக்கான  நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்ற நிலையைக் கடந்து விலங்கினங்களும் பல்லுயிர்களையும் பாதுகாப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!