யாழில் 50 பவுண் நகை கொள்ளை!
 
																																		யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை உடைத்து 53 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது.
நல்லூர் உற்சவத்தை காண்பதற்காக குறித்த வீட்டில் இருந்தவர்கள் சென்றிருந்த நிலையில், 53 சவரன் நகை மற்றும் 100 அமெரிக்க டொலர் பணம் என்பன களவாடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
