தற்கொலைகளை குறைக்க பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்தும் இங்கிலாந்து
தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளை விற்பனை செய்வதை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இது சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய தற்கொலை தடுப்பு உத்தியின் ஒரு பகுதியாகும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தற்கொலைக்கான புதிய முறைகளை முன்னிலைப்படுத்த தேசிய எச்சரிக்கை அமைப்பு குறித்தும் புதிய கொள்கை பேசுகிறது. இதுபோன்ற கடைசி உத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
கடைகளில் வாங்கக்கூடிய பாராசிட்டமால் எண்ணிக்கையைக் குறைப்பது இங்கிலாந்தில் தற்கொலை விகிதங்களைக் குறைக்க உதவுமா என்பதை மறுபரிசீலனை செய்ய மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கொள்கை கூறுகிறது.
தற்போது மக்கள் அதிகபட்சமாக 500மி.கி அளவுள்ள 16 மாத்திரைகளான பாராசிட்டமால் கொண்ட மருந்துப் பொட்டலங்களை மட்டுமே வாங்க முடியும்.
இங்கிலாந்தில் உள்ள அமைச்சர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் இங்கிலாந்தில் தற்கொலை விகிதங்களைக் குறைப்பதாக உறுதியளித்துள்ளனர்.