வவுனியாவில் மதுபோத்தலுடன் ஆலயத்திற்கு வந்த குருக்களால் சர்ச்சை!

வவுனியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ஆலயமொன்றில் மகோற்சவத்தின் போது குருக்கள் ஒருவர் மது போதையில் வருகை தந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (10.09) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.
குறித்த மகோற்சவத்திற்கு வருகை தந்த குருக்கள் ஒருவர் மது அருந்திவிட்டு வருகை தந்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை எச்சரித்து அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் மாவட்ட அந்தணர் ஒன்றியம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக இந்து காலாசார உத்தியோகத்தர் ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)