செய்தி வட அமெரிக்கா

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை கைது

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 12 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நான்காம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை என்று கூறப்படுகிறது.

Alyssa McCommon என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

எனினும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு இந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

குறித்த ஆசிரியை தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மேலும் சில மாணவர்களை பாலியல் செயல்களில் ஈடுபட தூண்ட முயன்றதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவிகளுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக ஆசிரியை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் 12 வயது மாணவி கற்பழிப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி