அவசரமாக தரையிறங்கிய ஏர் சீனா விமானம்!
ஏர் சீனா விமான இயந்திரத்தில் தீப்பிடித்ததன் காரணமாக சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த சம்பவம் இன்று (10.09) இடம்பெற்றுள்ளது.
தென்மேற்கு சீன நகரமான செங்டுவில் இருந்து புறப்பட்ட CA403 விமானத்திலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 155 பேர் பயணம் செய்துள்ளனர்.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதில், 09 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





