இலங்கையில் அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கிச் சூடு

இரத்மலானை – ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
வாகனங்களில் பிரவேசித்த இனந்தெரியாத சிலர், வீடொன்றிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)