வட அமெரிக்கா

கனடாவின் கால்கரி நகரில் பயங்கர நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள 142 குழந்தைகள்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில், குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் பரவல் காரணமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் விடப்பட்ட குழந்தைகள் 142 பேர், ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுளதாக, ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களில் சில குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறுநீரகம் பாதிக்கப்படும்போதுதான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று என சுகாதார அதிகாரிகள் கூறாவிட்டாலும், இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், ஒரே சமையலறையிலிருந்துதான் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

Calgary daycares linked to E. coli outbreak to reopen, lawsuit being  considered

இந்த ஈ கோலை என்னும் கிருமியிலேயே பல பிரிவுகள் உள்ளன. நச்சுப்பொருளை உருவாக்கும் ஈ கோலை, குடலில் இரத்தம் வரவைக்கும் ஈ கோலை, குடலில் நோயுண்டாக்கும் ஈ கோலை, குடலின் தோலுக்குள்ளேயே நுழையக்கூடிய ஈ கோலை என்னும் பல வகை ஈ கோலைகள் உள்ளன.

பல ஈ கோலை கிருமிகள், மலம் கழித்துவிட்டு சரியாக கை கழுவாததால் பரவ வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட ஈ கோலையில், முதல் வகையான நச்சுப்பொருள் உருவாக்கும் ஈ கோலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே தற்போது டயாலிசிஸ் செய்யும் நிலைக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்