past foodஇனால் அதிகரித்து வரும் மரணங்கள் : ஒரு எச்சரிக்கை பதிவு!
(past food) ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பொதிசெய்து வைக்கப்பட்டுள்ள உணவுகள் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் தற்போதைய காலப்பகுதியில், இவ்வாறான உணவுகளை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
இதற்கிடையில் இவ்வாறாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்கின்ற, அல்லது கடைகளில் கொள்வனவு செய்து உண்ணுகின்ற உணவு பழக்கவழக்கம் காரணமாக 220 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் கடந்த 02 மாதக்காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 45 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக நூடுல்ஸ், பிரைட்ரைஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.