சிங்கப்பூரில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
சிங்கப்பூரில் பேஷோர் சாலையில் உள்ள காண்டோமினியம் பிளாக்கின் 25 வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
26 வயதுமிக்க அந்த பெண்ணை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.
அவர் 25 வது மாடியில் இருந்து விழுந்ததாக வாசகர் கூறியதாக மதர்ஷிப் குறிப்பிட்டுள்ளது.
அவர் சீனப்பெண் என்றும் கூறப்படுகிறது. கடந்த 7ஆம் திகதியன்று மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் அவர் விழுந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அன்று மாலை 6 மணியளவில் ஒருவர் உயரத்தில் இருந்து தவறி விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதி செய்தனர்.
இதில் சதிச்செயல் ஏதும் இல்லை என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.





