உள்நாட்டு இறைவரி சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்த வாக்கெடுப்பு இன்று (07.09) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இந்த உத்தேச சட்டமூலம் பல வரிகளை திருத்தியமைப்பதுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்ட குறித்த சட்டமூலம் அல்லது அதன் விதிகள் எதுவும் அரசியலமைப்பின் 12 வது பிரிவு அல்லது எந்த விதிகளுக்கும் முரணாக இல்லை என்பதை உறுதி செய்த நிலையில், மசோதாவை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்மானித்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது சபாநாயகரால் வாசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.