இலங்கை

இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்றி செயற்படுகிறது – வாக்கர் டர்க்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வாக்கர் டர்க் இலங்கை தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்டு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ள போதிலும், உண்மையைக் கண்டறிவது மட்டும் போதாது எனவும், குற்றவாளிகளை தண்டிக்க போதுமான பொறிமுறையை வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்றும்,  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டம் தொடர்பாக தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் ஆட்சியில் வரலாற்று ரீதியிலான மாற்றம் கடந்த கால மக்கள் எதிர்ப்புக்களில் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்றும், இதன் காரணமாக நீண்டகால சவால்களுக்கு தகவல் வழங்குவது மேலும் தாமதமாகி வருவதாகவும் உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்றி செயற்பட்டு வருவதாகவும், அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் நாட்டில் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவர்,   தேர்தலை ஒத்திவைப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆழமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை அடைவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்