கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கப்பட்டுள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனி கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட முடியாது என தெரிவிக்குமாறு கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதேபோன்று கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கட்சியின் செயலாளர் நாயகத்தின் உறுப்புரிமையும் தடைசெய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஒழுக்காற்று விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.