பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!! இம்முறை 45,000 பேருக்கு வாய்ப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கடந்த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 45,000 மாணவர்கள் 2022/23 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகக் கல்விக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பக் கையேட்டை இப்போது அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.





