மின்சார சபையில் ஊழியர்களை குறைக்க வேண்டி வரும் – காஞ்சன!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத் திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த ஊழியர்களை குறைக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறிய அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)