செய்தி விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த குயிண்டன் டி காக்

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார்.

தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.

140 போட்டிகளில் இடம்பெற்றுள்ள அவர் 17 சதம் மற்றும் 29 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார்.

டி காக் ஒருநாள் போட்டிகளில் 197 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்).

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி