பிரான்ஸில் அச்சுறுத்தும் ஆபத்தான கொவிட் திரிபு – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
பிரான்ஸில் கொவிட் 19 வைரசின் புதிய திரிபு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் 19 வைரசின் ஒரு பிரிவான ஒமிக்ரோனில் (Omicron) இருந்து இந்த புதிய வைரஸ் திரிவடைந்துள்ளது.
அதற்கு BA.2.86 என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் ஐரோப்பாவின் சில நகரங்களில் இந்த திரிபு கண்டறியப்பட்டிருந்தது
இந்த நிலையில், Grand Est மாகாணத்தில் முதன்முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மீஇந்த புதிய திரிபு ஆபத்தான ஒன்றாக இருதப்பட்டாலும், தற்போது வரை எந்த சிறப்பு நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடைமுறைகளும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுமா எனும் கேள்விக்கு, தற்போது அது அவசியம் இல்லை என Grand Est மாகாணத்துக்கான பிராந்திய சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.