சைப்ரஸில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறையில் 20 பேர் கைது
சைப்ரஸ் தீவின் இரண்டாவது பெரிய நகரமான லிமாசோலில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான அணிவகுப்பு, சொத்துக்களை சேதப்படுத்தும் கும்பல்களால் வன்முறையாக மாறிய பின்னர் 20 பேரை சைப்ரஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 500 பேர் அணிவகுப்புக்காக வீதிகளில் இறங்கியதையடுத்து, ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குப்பைத் தொட்டிகள் தீவைத்து, சில கடைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த அணிவகுப்பின் போது சில வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டதாக சைப்ரஸ் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சாட்சிகள் தெரிவித்தனர்.
இன்று வரை வன்முறை தொடர்ந்ததால், ஆசிய டெலிவரி ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடை முகப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர், அவர்களில் சிலர் முகமூடி அணிந்து, “அகதிகளை வரவேற்கவில்லை” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்தனர்.