ரஷ்யாவின் மிகப் பெரிய எரிபொருள் கிடங்கில் தீ விபத்து
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பெரிய எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த தீயினால் எண்ணெய் சேமிப்பு கிடங்கு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பெருமளவான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எண்ணெய்க் களஞ்சியத்தில் இருந்து தீயுடன் அவ்வப்போது பெரிய வெடிச் சத்தங்களும் கேட்கின்றன என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது எண்ணெய் சேமிப்பில் இருந்து பெரும் கரும் புகை எழுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய நேரப்படி காலை 10.59 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தீயை அணைக்க சுமார் 120 ரஷ்ய தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ருச்சி எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய ஆன்லைன் செய்தி நிறுவனமான ஃபோண்டாங்கா தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை; இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.