இலங்கை

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு – நெருக்கடியில் இலங்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலையில் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இந்திய உணவுப் பொருட்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளமையினால் இலங்கையும் அதன் தாக்கங்களை உணர நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலநிலை மாற்றத்தின் தாக்கமே இந்த நிலைக்கு உடனடி காரணமாகும்.

இதன்படி பருப்பு விலை 20 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெங்காயத்திற்கும் 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்த இந்தியா, கோதுமை மாவு ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக உலக சந்தையில் 40 சதவீத அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. சர்க்கரை மற்றும் வெங்காயம் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.

உலக விவசாய வர்த்தகத்தில் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு உலக உணவுச் சங்கிலியையும் பாதிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!