வணிக வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை – ஆளுநரே பொறுப்பு!!
இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான சுற்றறிக்கைகள் சில வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கவில்லை எனவும் அதற்கு மத்திய வங்கி ஆளுநரே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





