The Colors Of Jaffna – விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ‘The Colors Of Jaffna’ என்ற பெயரில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் சமையல் மற்றும் கட்டடக்கலை அம்சங்கள் உள்ளிட்ட கலாச்சார மற்றும் சமூக தனித்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
இதனை ஆரம்பிக்கும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பகுதிக்கே உரித்தான காணொளி ஒன்று வெளியிடப்பட்டதுடன், மற்றுமொரு தொடர் நிகழ்ச்சித்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணப் பிரதேசத்தின் தனித்துவத்தை இலகுவாக அனுபவிக்கும் வகையில் பல ஹோட்டல் பொதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)





