இலங்கையில் 3 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!
இலங்கையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று(31) முதல் எதிர்வரும் 03 நாட்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டெங்கு அபாயம் அதிகம் நிலவும் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
வீடுகள் தோறும் சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் இதுவரை 61,697 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,147 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
28 பகுதிகள் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.