பருவநிலை மாற்றத்தால் உலகளவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தைக் குழந்தைகளுக்கு எதிரான ஒருவகை வன்முறையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கடுமையாகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாட்டு நிறுவனம், பிள்ளைகளுக்கான பாதுகாப்பு உடன்பாடு குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டது.
“தூய்மையும் சுகாதாரமும் கொண்ட சுற்றுப்புறம் பிள்ளைகளின் உரிமை” என்றது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில், இளம் வயதினர் அதிகமானோர் இப்போது முன்வந்து குரல் கொடுக்கின்றனர்.
உலக அளவில் சட்டரீதியாகவும்கூட இளையர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கின்றனர். போர்ச்சுகலில் பரவும் காட்டுத் தீயிலிருந்து அமெரிக்காவின் படிம எரிபொருள்வரை, அவர்கள் விவாதிக்கின்றனர்.
பூமியைக் காப்பாற்ற, அரசாங்கங்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இளையர்களின் வலியுறுத்தலாகும். அவர்கள், இந்த விவகாரங்களைச் சட்டரீதியாக மேலும் எளிமையான முறையில் அணுக வழிமுறைகள் வேண்டும் என்று ஐக்கிய நாட்டு அறிக்கை வலியுறுத்தியது.
120க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 16,000க்கும் கூடுதலான பிள்ளைகளின் ஆலோசனைகள் நாடப்பட்டன. பல பிள்ளைகள், சுற்றுப்புற சீர்கேட்டினால் தங்களின் வாழ்க்கையிலும் சமூகங்களிலும் நேரும் பாதிப்புகளைப் பற்றி அதில் பேசியிருந்தனர்.