தீவிரமடையும் இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்சனை
இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் சீனா வெளியிட்டுள்ள வரைபடமே. இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பரப்பை சீனா இணைத்து வரைபடத்தை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பீடபூமியைக் காட்டும் அதிகாரப்பூர்வ “நிலையான வரைபடத்தை” சீனா வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சீனாவுக்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாச்சி கூறுகையில், இந்தியாவின் நிலப்பரப்பை உரிமை கொண்டாடும் சீனாவின் நிலையான வரைபடத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எந்த அடிப்படையும் இல்லாத சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினைகளை சிக்கலாக்குவதாகவும் இந்தியா கூறுகிறது.