மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரும் இலங்கை அரசு – சிறீதரன்!
இந்த நாடு மிகப் பெரிய இனக்கலவரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொழும்பில் இருவகையான போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அங்கு தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் EPF,ETF குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது மலையக மக்கள் தான் எனவும், அரசாங்கம் இதை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஐ.எம்.எஃப்பின் ஐ.எம்.எஃபின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடனை மறுசீரமைக்கின்றோம் என சொல்லிக்கொண்டு மக்களுடைய பணத்தினையே கொள்ளையடிக்கிறது எனவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஒரு இனக்கலவரம் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.